ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வாணியம்பாடி,ஜூன்.26- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பொதுமக்களின் வரவேற்பை பெற்று காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட எல்லையான மாதனூரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட கழக செயலாளர்…
