தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்! ஆண்-பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்பு.
தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திருத்தேரின் வடம்பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார்! திருநெல்வேலி, ஜூலை.8:- தமிழ்நாட்டில் பாடல்பெற்ற 14 சிவத்திருத்தலங்களுள் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாவாகிய “ஆனிப்பெருந்திருவிழா” சென்ற மாதம் [ஜூன்] 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.9-ஆம் நாள் திருநாளான இன்று [ஜூலை.8] காலையில், இத்திருக்கோவிலின் 519-ஆண்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழக “இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்” பி.கே.சேகர்பாபு, “சபாநாயகர்”…
