ஆக் 27, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது.
வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
