ஆக் 27, கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் உள்ள ரப்பர் ஷீட் உலர வைக்கும் ஆலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ரப்பர் ஷீட்டுகள் தீக்கிரையாய் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
