கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி : நவம்பர்,01 மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை ஊராட்சியில் இன்று (1.11.2025)நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவிருக்கும் பணிகளை கூறி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இக்கிராம சபைக்கூட்டத்தில், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி…
