Headlines
குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி : நவம்பர் 12. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெருமளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் அருகே இன்று (12ம் தேதி) அதிகாலை நடைபெற்ற சோதனையில், கேரளா பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரில் சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், குளச்சல் வாட்டர் டாங்க் அருகே சோதனைக்குட்பட்ட மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது….

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலி,நவ.12:- “தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (நவம்பர்.12) புதன்கிழமை காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகில் உள்ள, “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் ஆறு நபர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய…

Read More
நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S-I-R-ஐ எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது

Read More
கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை நவம்பர் : 11 கோவை சிவானந்தா காலனி சந்திப்பில் எஸ் ஐ ஆர்- ஐ எதிர்த்து திமுக தலைமையில், வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் கழகத்தின் மூன்று மாவட்ட செயலாளராளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள். மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தோழர்களும் ததிரளாகளகலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்

Read More
நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில்; நவ.10 குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

மடத்துக்குளம் : நவம்பர்,06. மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர்…

Read More
விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தின் கோரிக்கை

விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தின் கோரிக்கை.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது அடிப்படை மற்றும் இன்றியமையா தேவை மற்றும் உரிமைகள் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வார்டிலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டி புகார் மற்றும் ஆலோசனைப் பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகராட்சிகளில் நடைமுறைப்படுத்துவதை போன்று விழுப்புரம் நகராட்சியிலும் பொதுமக்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவிடுவதற்கு ஏதுவாக வாட்ஸ் ஆப் நம்பரை அறிவிக்க…

Read More
திண்டுக்கல் இ-சேவை மையத்தில் அடாவடி வசூல்!

திண்டுக்கல் இ-சேவை மையத்தில் அடாவடி வசூல்!

திண்டுக்கல் : நவம்பர்,05. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள JR Browsing இ சேவை மையத்தில் TNEFADGL534-01 தமிழ்நாடு அரசு சேவை பதிவு எண் கொண்ட அலுவலகத்தில் 4.11.2025 சுமார் மாலை 6.00 மணி அளவில் பட்டா பதிவு செய்வதற்காக சென்ற பொழுது பத்திரம் மற்றும் ஈசி வாங்கிப் பார்த்துவிட்டு அப்பத்திரத்தில் உள்ள உட்பிரிவுகளுக்கு ரூ800 வீதம் 19 உட்பிரிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் மற்றொரு இ.சேவை…

Read More
திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை “தமிழ் அறிஞர்” கா.சு.பிள்ளையின்,137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலி,நவ.5:-மூத்த தமிழ் அறிஞர், உ.வே.சா. அவர்களின் மாணவர், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியர், திராவிட இயக்க தலைவர்களான பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் ஆசிரியர், அறுபதுக்கும் மேற்பட்ட, தமழ் நூல்களை எழுதியவர்-என, பன்முகத்தன்மை கொண்ட நெல்லை கா.சு. பிள்ளையின், 137 -வது பிறந்த தினமான இன்று (நவம்பர்.5) அதிகாலை, திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள, அன்னாரது நினைவு கல்வெட்டுக்கு, திருநெல்வேலி “தமிழ் இலக்கிய அமைப்புகள்” சார்பில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.5:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் பொது (தேர்தல்) அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2026, ஜனவரி 1-ஆம் தேதியினை, தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, வீடு தோறும் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சாந்திநகரில், படிவங்கள் வழங்கும்…

Read More