விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வீடூர், சிறுவை, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது என பொதுமக்கள் தகவல் அளித்திருந்தனர். சமீப காலமாக விவசாயிகள் அமைத்துள்ள பட்டிகளுக்கு, சிறுத்தைகள் வந்து செல்கின்றன. பட்டிகளில் காவலுக்கு ஆட்கள் ஏதும் இல்லாததால் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பதை சமீப காலமாக விவசாயிகள் தவிர்த்து வந்தனர்….
