Headlines
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு

தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு.

சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து முகாமை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். முகாமில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு, மாநகர் செயலாளர் திரு. ஆனந்த், மாநகர அவைத் தலைவர் திரு. பன்னீர்செல்வம், மண்டல தலைவர் திரு. ஜவஹர், மாமன்ற உறுப்பினர் திருமதி கலாராணி, மாநகர் துணைச் செயலாளர் திரு. வேல்முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. C.T. சுரேஷ், வட்ட செயலாளர் திரு. ரஞ்சித், மற்றும் கழக நிர்வாகிகள் திரு. தன்ராஜ், திரு. ஜார்ஜ், திருமதி. ராணி, திருமதி. புஷ்பவதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளும் பங்கேற்று, பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

நாகர்கோவிலில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.

ஆக் 21, கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி…

Read More
கன்னியாகுமரி அருகே போலீஸாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை; திருமணமாகி 2 ஆண்டுகள் புகுந்த நிலையில் பலத்த அதிர்ச்சி

கன்னியாகுமரி அருகே போலீஸாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை; திருமணமாகி 2 ஆண்டுகள் புகுந்த நிலையில் பலத்த அதிர்ச்சி.

ஆக் 21, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, காவல்துறையில் பணியாற்றும் ஒருவரது மனைவி, திருமணமான 2 ஆண்டுகளில், வீட்டில் உள்ள ஆதிக்கத்தும், விமர்சனத்தும் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மகளை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸ்காரர் கணவர் உட்பட 3 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில் மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவராக அன்றனி அலெக்ஸ் பொறுப்பேற்றார்

நாகர்கோவில் மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவராக அன்றனி அலெக்ஸ் பொறுப்பேற்றார்.

ஆகஸ்ட் 21, நாகர்கோவில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகர மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவராக தேர்வான அன்றனி அலெக்ஸுக்கு, மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் மற்றும் குமரி பாராளுமன்ற உறுப்பினரான விஜய்வசந்த் எம்.பி நியமனச் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் மற்றும் மாநில காங்கிரஸ் செயலாளர் எம்.ஜி. ராமசாமி, குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் மற்றும் ஏஐசிசி உறுப்பினர்…

Read More
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி, ஆக.20- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வளையம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், மகராசி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தி அருள், எம்.கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் திருப்தி கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை…

Read More
குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்

குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்.

ஆக் 21, கன்னியாகுமரி குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆக.19-ல் ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார். அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது. 2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளதால் மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8000க்கு ஏலம் போனது….

Read More
கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பழனி ஆயக்குடி பொன்னாபுரம் கூட்டுறவு சங்க அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பழனி அருகே ஆயக்குடியில் பொன்னாபுரம் கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. எப்போது திறக்கும் என்று பொன்னாபுரம் சார்ந்த விவசாயிகளும் மக்களும் எதிர்பார்ப்புடன் பழனி சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.. 4 மாதங்களாக கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழா தள்ளி போவதால் கூட்டுறவு சங்க கடன்கள் பெற முடியாத சூழல் ஏற்படுவதாகவும் மக்கள் வாழ்வாதாரம் இல்லாத சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் விவசாயிகள் வருத்தம்.

Read More
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 20 : நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், IPS அவர்களுடன் இணைந்து அடிக்கல் நாட்டினர். பின்னர் சிறப்புரையாற்றிய அவர்கள், ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்காக இக்கட்டிடம் பெரும் பயனளிக்கும் என தெரிவித்தனர். அத்துடன், காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள்,…

Read More
கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி

கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி.

ஆக் 20, கன்னியாகுமரி மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் நினைவாக கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் என். சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி…

Read More
நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.

நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் 51வது வார்டில் ரூ.43.82 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று துவக்கமிடப்பட்டது. பிள்ளையார்புரம், சின்னநைந்தான்விளை மற்றும் திருநகர் சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் இப்பணியின் மூலம் அப்பகுதி மக்கள் சாலை வசதி பெற உள்ளனர். துவக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மேயர் ரே. மகேஷ், தெற்கு மண்டல சேர்மன் Dr. பி. முத்துராமன், மாநகராட்சி பொறியாளர் ராஜ…

Read More