Headlines
கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த குறைவன்மேட்டை சேர்ந்தவர் சந்திரலேகா வயது (36).இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும் பொது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுசத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். மாவட்ட நிருபர் : R. விக்னேஷ்

Read More
மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த…

Read More
தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. உடுமலை நகரில் தபால் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2 குரங்குகள் சுற்றி வருகின்றன இவை அப்பகுதியில் கடைகளில் புகுந்து பொருட்களை தின்பதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இப்பகுதியில் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கிளை சிறைச்சாலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன தினசரி ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர் அதிக அளவில் மரங்களும் இந்த பகுதியில் உள்ளதால் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி வருகின்றன. அருகிலேயே வனத்துறை அலுவலகம் உள்ளது குரங்குகளை…

Read More
ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. புதர் மண்டி காணப்படும் அமராவதி கிளை ஓடை மற்றும் குமரலிங்கம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமராவதி கிளை ஓடை செல்கிறது. பாப்பான்குளத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் இந்த ஓடை அமைந்துள்ளது ஓடையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது தற்போது இந்த ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்…

Read More
தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

பிகாா் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்தைப்போல, தமிழகத்தில் அக்கட்சி இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாநில அரசின் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் இணைந்துதான் பணியாற்றி வருகின்றனா். ஆகையால், இதில் எந்தத் தவறும், குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக்…

Read More
தேரூரில் மழைநீர் வடிகால் பணிக்கு தொடக்க விழா.

தேரூரில் மழைநீர் வடிகால் பணிக்கு தொடக்க விழா.

கன்னியாகுமரி மாவட்டம், நவம்பர் 17: தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டில், 15வது நிதிக் குழு மானிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையிலான மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்கத்தை தேரூர் பேரூராட்சி தலைவர் திருமதி அமுதா ராணி அவர்கள் செய்தார். இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், உள்ளூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மழைக்காலத்தில் பெரும்பாலும் நீர் தேங்குதல் பிரச்சனைகளை சந்தித்து வந்த 12வது வார்டில், இந்த…

Read More
கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "மாநிலம் முழுவதும்" " நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “மாநிலம் முழுவதும்” ” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

நவம்பர் 16,2025,தக்கலை:- தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் S.I.R-ஐ எதிர்த்து மாவட்ட தலைமையகங்களில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் தக்கலை மணலி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் சபின் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்த கழக உறுப்பினர்கள், இளைஞர் அணி, பெண்கள்…

Read More
புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தெரியவந்து கார் மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி,நவ.13:-தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் உத்தரவின் பேரில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்ட காவல் துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடுகின்ற வழிபாட்டுத்தலங்கள், தினசரி சந்தைகள், எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கும் கடைவீதிகள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்- என அனைத்து இடங்களிலும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு, மாவட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில்,…

Read More
கடலூர் பஸ் மோதி பரிதாப பலி

கடலூர் பஸ் மோதி பரிதாப பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபதுக்குள்ளனது. இதில் படுக்காயம் அடைந்த நபர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர் R. விக்னேஷ்

Read More