திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்! துணை மேயர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றார்!
திருநெல்வேலி,டிச.16:-திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து, இன்று (டிசம்பர்.16) காலையில் “மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்” நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜூ, இந்த முகாமில் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து, பெறப்பட்ட, மனுக்கள் மீது, உரிய நடடிவக்கைகளை எடுத்திடுமாறு, சம்பந்தப்பட்ட அலுவர்களிடம், துணை மேயர் கேட்டுக்கொண்டார். உதவி ஆணையாளர் மகாலெட்சுமி, அப்போது உடனிருந்தார். மாநகர மக்கள் கொடுத்த மனுக்களில் குறிப்பிட்டுள்ள, முக்கிய அம்சங்கள் வருமாறு:-14-வது வார்டு கவுன்சிலர் ஆர்.கீதா அளித்த மனுவில்,…
