Headlines

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம் வெடிக்கும் என்றும் திருவிதாங்கோடு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *