கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக மற்றும் கல்விசார் பணிகளில் ஈடுபட்டு வரும் மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி வரலாற்றைப் பதிவு செய்யும் “வேர்களைத்தேடி – மாலிக்தினார் பைத்துல்மால் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளியீட்டு விழா, பைத்துல்மால் மாலிக்தினார் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது.

இப்ராஹிம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் ஆசிரியர் இப்ராஹிம் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். திருவை முஸ்லிம் ஆர்ட்ஸ் கல்லூரி தாளாளர் முகமது அலி தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார்.
நூலின் முதல் பிரதியை கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற ஆசிரியர் அபுஹாஷிமா பெற்றுக்கொண்டார். நிகழ்வில் சமூக அமைப்புகள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய பலரும் கலந்துகொண்டு நூலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், எழுத்தாளர் குளச்சல் அசீம், ஓய்வுபெற்ற ஆசிரியர் சாகுல் ஹமீது, மலுக் முகமது, முகமது ஷா, சுகர்னோ உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழாவில் பங்கேற்றனர்.
மாலிக்தினார் பைத்துல்மாலின் உருவாக்கப் பயணம், அதன் சமூகப் பங்களிப்புகள் மற்றும் வளர்ச்சிப் பாதையை ஆவணப்படுத்தும் முயற்சியாக இந்த நூல் பார்க்கப்படுகிறது. உள்ளூர் சமூக அமைப்புகளின் வரலாற்றை பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் இத்தகைய வெளியீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என நிகழ்வில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
