திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.
மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் காரத்தொழுவு , ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா , மகளிர் உரிமை தொகை , புதிய ரேசன் அட்டை , முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவைகளை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்….
