ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
வாணியம்பாடி,ஜூலை.23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.சீனிவாசன். இவர் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை அணுகிய போது அவர் வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் கடந்த ஓராண்டில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் 2 லட்சம் பணம் கேட்டு…
