திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!
திருநெல்வேலி,நவ.12:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “சிதம்பராபுரம்” பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30). தினக்கூலி தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தெரு நாய், இவரை கடித்தது. இதை ஐயப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், வழக்கமாக வேலைக்கு சென்ற ஐயப்பனின் உடல்நிலை, திடீரென மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனை, அவருடைய குடும்பத்தினர், நாகர் கோவில் அருகே, “ஆசாரிப்பள்ளம்” என்னும் இடத்தில் அமைந்துள்ள,…
