திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி, செப். 29:- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இன்று (செப்டம்பர். 29) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். பொதுவான மனுக்கள் மீது மட்டுமல்லாமல், முதலமைச்சரின்…
