Headlines
அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை

அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 26 -ல் பயனீர் மில் சாலையில் அமைந்துள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பீளமேடு பகுதி பொறுப்பாளர் A.S.நடராஜ், வட்ட கழக பொறுப்பாளர் மாடசாமி, தகடூர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன்,மாவட்ட பிரதிநிதி பூ.வெ.துரைசாமி,…

Read More
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்.

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் கார்கள், தங்கம், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது…

Read More
விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில் விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில்விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், விழுப்புரம்–புதுவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிகழ்வில், கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து பூஜை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விசில் சின்னம் எளிய மக்களின் சின்னமாக இருப்பதாகவும், அதை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்த சின்னம்…

Read More
பழனியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி கைது - 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்

பழனியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் – மனைவி கைது – 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கலையம்புத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த முத்து, மற்றும் அவரது மனைவி மீனா ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து விழுப்புரத்தில் கொண்டாட்டம்

தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கியது குறித்து விழுப்புரத்தில் கொண்டாட்டம்.

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதில் கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமை ஒரு அணியும் நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் போல மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என தனித்து நிற்கின்றது இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றி‌ கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் கரூர் துயர் சம்பவம் தொடர்பாக நடிகர்…

Read More
மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை

மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை

மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு தவறி விழுந்தது காயம் அடைந்தது இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே திடீர் நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை விரைந்து வந்தார்கள். தெப்ப குளத்திற்குள் இறங்கிய காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடி கொண்டு இருந்த பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டர்கள்…

Read More
பழனி அருகே சாதியின் பெயரை சொல்லி தாய் மற்றும் மகன் மீது கொடூரத் தாக்குதல்..

பழனி அருகே சாதியின் பெயரை சொல்லி தாய் மற்றும் மகன் மீது கொடூரத் தாக்குதல்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெரிய மொட்டுனுத்து என்ற கிராமத்தில் மாரிமுத்து என்பவரின் மனைவி தெய்வானை மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.. தொடர்ந்து அப்பகுதியில் நடு இரவு நேரத்தில் வசந்த்,மற்றும் துர்க்கைராஜ் ஆகிய இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அருந்ததியினர் குடியிருப்பு பகுதிக்குள் புல்லட்டில் வந்து வெடிவைத்து புல்லட்டில் இருந்து அதிகப்படியான ஒலியை எழுப்பியுள்ளனர். சத்தம் தங்க முடியமல் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வானை அவரது மகன் மாயகிருஷ்ணன் இருவரும் ஏன் இப்படி…

Read More
மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் - நேர்மையான பெண் மேலாளரை எரித்து கொன்ற கொடூர அதிகாரி

மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் – நேர்மையான பெண் மேலாளரை எரித்து கொன்ற கொடூர அதிகாரி.

மதுரை – மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலளரான கல்யாணி நம்பி (55) என்பவர் தீயில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரியான ராம் என்பவருக்கு காலில் தீ…

Read More
பழனியில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதில் இருவர் கைது

பழனியில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதில் இருவர் கைது.

பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் அடிவார காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜா, சார்பு ஆய்வாளர் திரு பிரதாப் மற்றும் காவலர்கள் சக்திவேல், மற்றும் பெண் காவலர்கள் அந்த தனியார் தங்கும் விடுதியை சோதனை செய்ததில் அங்கு…

Read More
விவசாய விழிப்புணர்வு மற்றும் சமத்துவ பொங்கல் விழா

விவசாய விழிப்புணர்வு மற்றும்சமத்துவ பொங்கல் விழா.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி கிராமத்தில் வேடசந்தூர் எஸ்.ஆர். எஸ் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆபித், அஜய், அபிஷேக், பாரதி, தரணிதரன் ,திராவிட சிவரஞ்சன், ஐயப்பன், கார்த்தி, ஹர்ஷவர்தன் ஆகிய மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத்திட்டத்திற்காக சாலையில் விவசாயம் சம்பந்தமான கால வரைபடங்கள்,வளங்கள், சமூக வரைபடங்கள்,கிராம வரைபடங்கள், போக்குவரத்து வரைபடங்களை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாணவர்களின் உதவியுடன் வரைந்து அதனை விவசாயிகளுக்கும் , கிராமப்புற…

Read More