மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள அசோக் நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெரு முழுவதும் கழிவு நீர் வெளியேறி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் மதுரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மேலும், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனால் வெளியே வரும் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாந்தி ,மயக்கம் ,காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது.
இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை நோய் வாய் பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் மேலும் மதுரை மாநகராட்சியிடம் எவ்வளவு முறையிட்டும் உரிய நடவடிக்கையை எடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறார்கள் மதுரை மாநகராட்சி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
