Headlines
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

செப் 9, கன்னியாகுமரி : சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் தேங்கிய சேறு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மீன்பிடிப்பு உரிமை ஏலம் : குளத்தின் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பால் கிடைக்கும் பலன் : பணிகள் முடிந்ததும் நீர்த் தேக்கம் மேம்பட்டு, பக்தர்களும் உள்ளூர் மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பு. கன்னியாகுமரி நகர நிருபர் : செய்லிஸ்

Read More
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…

Read More
குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

மாவட்ட கண்காணிப்பாளர் Dr. Stalin உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடி முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்ற உத்தரவால், மாவட்ட காவல் துறையில் புதிய பணியமைப்புகள் உருவாகி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணுதலில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…

Read More
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்…

Read More
கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

செப் 6 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி…

Read More
குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

செப்6, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள்…

Read More
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

செப் 5, கன்னியாகுமரி முன்னாள் குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றியதும், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள சுகந்தி ராஜகுமாரி அவர்கள், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த உயர்வினை அப்பகுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தியுள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

செப் 4 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள்…

Read More