Headlines
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…

Read More
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு

நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…

Read More
குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு - மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு – மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியின் அலட்சியமும் மெத்தன போக்கும் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி, குளச்சலில் உள்ள பிஸ்மி திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் குப்பை சேகரிக்க சென்றது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கபீர் என்பவர் மீது குப்பை…

Read More
மனநலம் பாதித்த யாசகர் மீட்பு... ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு...

மனநலம் பாதித்த யாசகர் மீட்பு… ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு…

கன்னியாகுமரி, பிப் : 14கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும்…

Read More
புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? - நாகர்கோவிலில் சலசலப்பு!

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? – நாகர்கோவிலில் சலசலப்பு!

நாகர்கோவில், பிப் 13 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் அல் காலித். இவர் அண்மையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மோதல் போக்கு, அரசு அதிகாரிகளுடன் இணக்கமின்மை, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் முரண்பாடு என அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமைக்கு அல் காலித் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கட்சிக்காக…

Read More
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி.

நாகர்கோவில், பிப்ரவரி 11: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி முடங்கியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, வழக்கமாக ஒன்றாவது நடைமேடையில் வரும் சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த சில நாட்களாக மூன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டதால், முதியவர்களும், அதிக உடைமைகளுடன் வருவோரும் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றிப் பயணிகள் போர்ட்டர்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத்…

Read More
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கை மீட்பு – பல மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி மேற்கொண்ட சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். டாக்டர் நோபிள் தலைமையிலான மருத்துவக் குழு, நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி இந்த அரிய சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த…

Read More
மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு

மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு.

மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா தேவாலய பங்கு பேரவையில் பல கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடைத் தொகைகள் மற்றும் சொத்துக்கள் பங்கு பேரவையின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படாமல், தனியாக தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் வரவு வைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க…

Read More
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.

நாகர்கோவில், பிப். 9: முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர். தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து,…

Read More
மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு : சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு - கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு :சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு – கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி, பிப் 7 : கன்னியாகுமரி மாவட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிறிஸ்தவ சம்பவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் 2013 ஆம் ஆண்டு முதல் சாதி குறிப்பு பகுதியில் “மதம் மாறிய கிறிஸ்தவர்” என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையான சாதி குறிப்பு மாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சமூகத்தினரிடையே நிலவி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட…

Read More