தக்காளி விலை கடும் சரிவு பறிக்க ஆள் இல்லாமல் வயல்களில் வீணாகும் அவலம்.
உடுமலை செப்.29- உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் நடப்பு சீசனில் தக்காளி விலை சரிவு, பறிக்க ஆட்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சீதோஷன நிலை மாற்றம் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மகசூல் பெருமளவு பாதித்தது. இந்நிலையில் தக்காளி விளையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. உடுமலை மற்றும்…
