திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!
திருநெல்வேலி,நவ.3:- வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVIEW – SIR) தொடர்பான பணிகள், நவம்பர்.4-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்.4) முடிய நடைபெற உள்ள சூழ்நிலையில், இன்று (நவம்பர்.3) காலையில், நெல்லை “கொக்கிரகுளம்” பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறிதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதியில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், மாநகர பகுதியில்…
