நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!
நாகர்கோவில், அக்.27: நாகர்கோவில் மாநகரில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடை (எண் 4747) எதிரில், பெண்களுக்கென தனிப்பட்ட பார் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒட்டியபடி, பெண்கள் மது அருந்திவிட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “இது நமது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோன்ற மதுக்கடைகள் நகர மையப் பகுதிகளில் இயங்குவது பொருத்தமல்ல,” என்று…
