திருநெல்வேலி மாவட்டத்தில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி, அக். 2:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரன், இன்று ( அக்டோபர். 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-“சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக, சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும், உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது, சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சமூக அமைதிக்கு இடையூறாக…
