திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,நவ.25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று {நவம்பர்.25} காலையில் “ஆலோசனை” நடத்தினார். அப்போது பேசிய அவர், “படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த, சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த…
