பாசன பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும், நடப்பு பிசான பருவ சாகுபடிக்காகவும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காகவும், இன்று (நவம்பர்.1) காலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்இரா.சுகுமார் தலைமையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு,…
