தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை…
விழுப்புரத்தில் உள்ள சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 325 கல்குவாரிகளில் 25 மட்டுமே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன மற்றவை அரசுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் இந்நிலை விழுப்புரம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்…
