நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில் எவர்கிரீன் ரோட்டரி சங்கமும், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையும் இணைந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை எஸ்.எம்.ஆர்.வி. ஐ.டி.ஐ வளாகத்தில் நடத்தினர். அச்சங்கத்தின் தலைவர் சுபா செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் மற்றும் AHTU விங் அதிகாரி தாமஸ் லைஸா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விரிவான…
