Headlines
கோயம்புத்தூர் மாவட்டம் , கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.

இந்த நிகழ்வுகளில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. சபரி கார்த்திகேயன், பொது குழு உறுப்பினர் திரு.நடராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ராஜன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக‌நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மனோகரன் பொள்ளாச்சி உடுமலை

Read More
பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்! ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்!ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்.

அக் 16 கன்னியாகுமரி நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் நலனுக்காக நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், குறிப்பாக பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு…

Read More
மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க15/10/2025 அன்று மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 6,7,8,9,13,14,16,17,18 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்… வருவாய் துறை சம்பந்தமாக 410 , கலைஞர் மகளிர் உதவித்தொகை சம்பந்தமாக 393 ,என மொத்தம் 865 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி,சமூக பாதுகாப்பு திட்டம்…

Read More
திருநெல்வேலி கங்கை கொண்டான் "சிப்காட்" வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி கங்கை கொண்டான் “சிப்காட்” வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.15:- வடகிழக்குப் பருவமழையைக் கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் “சிப்காட்”வளாகத்தில் அமைந்திருக்கும் “பள்ளக்குளம்” கண்மாய் கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணிகள், இன்று (அக்டோபர். 15)காலையில் நடைபெற்றன. திருநெல்வேலி பயிற்சி உதவி ஆட்சியர் தவலேந்து, முதன் முதலாக சில பனை விதைகளை நடவு செய்து, இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களான பனை மரங்களை, கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள் போன்றவற்றின் கரையோரங்களில் வளர்ப்பதன் மூலம், நீர்நிலைகளின் ஆதாரங்கள்,…

Read More
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

திருநெல்வேலி,அக்.14:-வடகிழக்குப் பருவ மழை, துவங்கயுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழை நீர் ஓடைகளை தூர்வாரும் பணிகள், மழைநீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் கழிவுநீர் ஓடையில் தேங்கியுள்ள, மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆகியன, தற்போது நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும், மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதன்படி,…

Read More
மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள அசோக் நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெரு முழுவதும் கழிவு நீர் வெளியேறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் மதுரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனால் வெளியே வரும் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாந்தி ,மயக்கம் ,காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல்…

Read More
பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.

பழனி PSKL குழுமம் உரிமையாளர் செல்வி.ஹர்ஷினி பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கேரளா மாநில அணிக்கு தேர்வு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமராஜ்யா தெருவை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் U17 இரட்டையர் மகளிர் பிரிவில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதைதொடர்ந்து வெற்றிபெற்ற பழனியை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநில பேட்மிண்டன் அணிக்கு தேர்வாகியுள்ளார். தமிழக விடியல் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Read More
குமரலிங்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

குமரலிங்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, வருவாய் கோட்டாட்சியர் குமார் வழிகாட்டுதலின் படி, வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், தனி வட்டாட்சியர் கௌரிசங்கர், குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா பானு ஆகியோர் முன்னிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 14/10/25 அன்று நடைபெற்றது.. முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 923 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. இதில் 52 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.. நிகழ்வில்…

Read More
பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!

பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!

திருநெல்வேலி,அக்14:- தென்காசி மாவட்டம், காசி தர்மம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் குமார் (வயது. 29). இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ம் தேதி முதல், பாளையங்கோட்டை மத்திய சிறையில், விசாரணைக் கைதியாக, அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைககப்பட்ட நாளில் இருந்தே, வினோத்குமார் மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் கணப்பட்டதாக, கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ( அக்டோபர். 14) காலையில், சிறையில் உள்ள குளியல் அறையில், தன்னுடைய…

Read More
ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது

ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது.

மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற தீபாவளி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.J.பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டார் இந்த விழாவில் சே.ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More