Headlines
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட…

Read More
வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 20 – ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்தபிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ தேவி…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக…

Read More
ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - நாகர்கோவிலில் பரபரப்பு!

ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும்…

Read More
சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழா.

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழாபேரூராட்சித் தலைவர் திருமதி.தேவி மன்னவன், தலைமையில் நடந்தது,சூலூர் வட்டத்திற்கு புதியதாக அரிமா சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம முன்னாள் எம்.எல்.ஏ திரு,எஸ் எஸ் பொன்முடி, அவர்களின் மகன்,திரு.விக்னேஷ், சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் திரு,மன்னவன், அரிமா மாவட்ட செயலாளர் திரு,சஜி டேவிடE. O திரு, சரவணன், தலைமை எழுத்தர் திரு,வேலுசாமி, சூலூர் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக…

Read More
அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா

அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா

மதுரையில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு டைரி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட செய்தியாளர்…

Read More
எல்லா சாமியும் ஒண்ணுதா

எல்லா சாமியும் ஒண்ணுதா

மதுரை கீழவாசல் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறுவர்கள், முருகன் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமிட்டு பங்கேற்பு இஸ்லாமியர்கள் போல் தொப்பி அணிந்து வந்த சிறுவனும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த சிறுவனும் ஒன்றாக சேர்ந்து வந்ததும், அங்கிருந்தவர்களை கவர்ந்தது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்

தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்.

தென்காசி : டிச-25 தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி செயலர் சகாய செல்வமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். துணை முதல்வர் அபுதாஹிர் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் நடனம், பைபிள் வாசித்தல், பாட்டு மற்றும் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ்…

Read More