இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கோவை: பாரம்பரிய சித்த மருத்துவத்தை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் கோவை மாவட்டம் திருப்பூர் மாவட்டம் என பல மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரம்பரிய மருத்துவர்களை அங்கீகரிப்பது, வைத்தியர்களின் வயிற்றில் அடிக்காதே, முதல்வர் அண்ணாச்சி கடந்த தேர்தல் அறிக்கை என்னாச்சு, பாரம்பரிய வைத்தியர்களை ஏமாற்றாதே! பாரம்பரிய வைத்தியர்களை தாசில்தார்களைக் கொண்டு கணக்கெடுத்து பதிவு செய்து…
