இதழ்கள்
கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :
௦3.09.2025, புதன்கிழமை காலை 09.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் வார்டு எண் 80-ல், “எல்லோருக்கும் எல்லாம்” திட்டத்தின் கீழ், “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம் மாநகராட்சி திருமண மண்டபத்தில், கெம்பட்டி குடியிருப்பு, தர்மராஜா கோவில் தெருவில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், 13க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் 43க்கும் மேற்பட்ட அரசுசாரா சேவைகள், பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான…
தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :
தென்காசி : தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வி .எம் . ஜே.திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா ஷேக் தாவவூது குத்து விளக்கினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி…
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உருஸ் விழாவைச் சுற்றி தகராறு – வக்ஃபு வாரியத்தின் ஆதரவு சந்தேகத்திற்கு உள்ளாகிறது.
குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் பகுதியில் அமைந்துள்ள தைக்க பள்ளி ஜமாஅத் வருடா வருடம் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி பாரம்பரியமாக உருஸ் விழா நடத்தி வருகிறது. இதன் பகுதியாக சமீபத்தில் கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமூதாய டிரஸ்ட், மாலிக் தினார் பைத்துல்மால் டிரஸ்ட், தைக்க பள்ளி டிரஸ்ட் ஆகியவை இணைந்து கொடியேற்றத்துடன் விழாவைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்களின் நிதியில் நடைபெறும் இந்த விழாவில், வக்ஃபு வாரியத்தின் ஆதரவுடன் சையது அஹ்மது முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர்…
கோவை மாமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருடன் ஜெர்மனியில் சந்திப்பு.
தமிழின காவலர் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB.ராஜா கோவைஆகியோரை மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஜெர்மனியில் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் “டாஸ்மார்க்” அருகாமையில் அடித்துக் கொலை !
விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரம் டாஸ்மார்க் அருகாமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் சேர்ந்த துளசி வயது 26 திருமணம் ஆகி ஒன்ற ஆண்டு ஆகியுள்ள நிலையில் ஆடு வியாபாரம் செய்து கொண்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ளவரிடம் ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்தார் முன்விரோத காரணமாக அடித்து கொலை செய்துவிட்டார் இந்த கொலை சம்பந்தமாக இதுவரை என்ன காரணம் என்று கூட தெரியாமல் காவல்துறை போராடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் அக்கிராம மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர் மேலும்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் உங்களுடன் “ஸ்டாலின் முகாம்” நடைபெற்றது :
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் KP மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் அவர்கள். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள். ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.ஊராட்சி மன்ற தலைவர் உமா நடராஜன். மற்றும் கட்சி நிர்வாகிகள்.அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக செய்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள். பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர். பண்ருட்டி செய்தியாளர் :R. விக்னேஷ்
பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !
செப் 2, கன்னியாகுமரி : நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட தமிழகப் போக்குவரத்து துறையின் குளிர்சாதனப் பேருந்தில், அஜாக்கிரதையான செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டியதுடன், பான் பராக் போட்டு துாங்கியவாறும் இருந்ததாக பயணிகள் கூறினர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்தனர். “பொதுமக்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநரை உடனடியாக…
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, கோவை சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் குறுமைய(zonal) விளையாட்டு போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.25, & 02..0.25நடைபெற்றுவறுகிறது. விழாவில் மேயர் திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள்,சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாமன்ற உறுப்பினர்கள் விளையாட்டு ஆய்வாளர், நடுவர்கள் மற்றும்பள்ளிக் கல்வித் துறை அநிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதிக்போட்டிகள்,மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் நாளை நடைபெறும். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
எட்டாங்குன்றில் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா.
செப் 1, கன்னியாகுமரி திருவட்டார்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட எட்டாங்குன்று பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். உடன், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும்…
