இதழ்கள்
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :
செப் 1, கன்னியாகுமரி கன்னியாகுமரி பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு உதவித் திட்டமாக மானிய விலையில் பரிசல்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக வழங்கினார். இதன் மூலம் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பெரும் பலன் அடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
கோட்டாறு மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு !
செப் 1, கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில், இயக்குநராக திருமதி ஆன்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், Dr. பைசல், Dr. அரசு, திருமதி கிளாடிஸ் கில்டா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ளனர். கோட்டாறு மறைமாவட்டத்தில் இக்குழு உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தீயில் கருகிய நிலையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு….!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெரிய கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியை சேர்ந்த டோமினிக் (54) மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது. இவர் குன்னூர் அருகே தேயிலை தூள் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இவருடைய மனைவி லிட்வின் இவர் ட்ருக் பக்காசூரன் மலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்..இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லிட்வின் மற்றும் அவரது மகள் ஆகியோர் சேலாஸ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற நிலையில் அவர்களது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தின் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இன மக்களை மாற்று சமூகத்து இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதன் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R அந்தோணிசாமி
குளச்சல் அருகே மதுபான பந்தயம் – ஒருவரின் உயிருக்கு ஆபத்து !
ஆக் 31, கன்னியாகுமரி : குமரி மாவட்டம் குளச்சல் அருகே நடந்த வியப்பூட்டும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி கொண்டாட்டத்தின் போது ரூ.500 பந்தயத்திற்காக ஒரு முழு புல் பாட்டில் மதுபானத்தை ஒரே மூச்சில் குடித்ததாகக் கூறப்படும் சுபின் (40) எனும் கொத்தனார் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். அவர் உயிரிழந்ததாக எண்ணிய நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுபின் இன்னும் உயிருடன்…
3 – வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :
நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்3 வது முறையாக நடைபெற்றது. முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது, இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது. இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் – 2022 ஆண்டிற்கான நேரடி நியமனம் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2022 ஆண்டிற்கான தொகுதி-1நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஈரோடு மண்டலத்தில் பயிற்சி முடித்து 30.08.2025அன்று முற்பகல் நீலகிரி மண்டலத்தில் உதகை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக திரு. ப. அஜித் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் மகளிர்களிடம் பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால் பெண்கள் பொறுமையாக காத்திருந்து கட்டனம் இல்லாத பேருந்தில் ஏருக்கிறார்கள். ஆனால் இன்று பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களிடம் பேருந்து நடதுனார் கட்டாயமாக வசூல் செய்வதாக பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்வதால் பெண்கள் ஏமாற்றம்…
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் : விஜய்வசந்த் எம்பி மரியாதை :
ஆக் 30, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் உள்ள தியாக சுடர் காமராஜர் பவனில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை…
நாகர்கோவிலில் போக்குவரத்து காவலரின் நடத்தை சர்ச்சை !
ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இடம் இல்லாத நிலையில், போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் செயலால் ஓட்டுநர் ஒருவர் அவதியுற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர கோட்டிற்கு உள் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து, அலைபேசி அழைப்பில் ஈடுபட்டிருந்த ஓட்டுநரிடம், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அதிகாரத் தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் கேட்ட ஓட்டுநரின் வாகனத்தில் இருந்தபடியே, அவர்…
