இதழ்கள்
ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது :
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 29 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமைத்துவமாக கலந்து கொண்டு, மாணவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக திரு. செந்தில்வேல் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ்….
கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குள மடை உடைப்பு ஆய்வு !
ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் புது கிராமம் அருகே உள்ள மாணிக்கம் புத்தேரி குளத்தில் மூன்று மடைகளில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டார். மடை உடைப்பால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து உடனடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து…
ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !
ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியில் ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ, நீரில் மிதந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்தில் திரண்டனர். திடீரென ஆற்றுக்குள் சென்ற மினி டெம்போ, நீரில் நீச்சல் அடிப்பது போல் மிதந்து செல்ல, அப்பகுதியை கடந்து சென்ற மக்கள் ஆர்ப்பரித்து பார்த்தனர். இதனால் அந்த பகுதி சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…
அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !
ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் நேற்று சோகமான விபத்து ஏற்பட்டது. ஒரே பைக்கில் மூன்று பெண்கள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், எதிரே வந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மூவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், இரு பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரின் நிலை உயிருக்கு ஆபத்தானதாக இருந்து தீவிர சிகிச்சை…
கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !
பாண்டி கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை நுணா குப்பம் வழியாக கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரில் வந்த கார் ஒன்று கணவன் மனைவி வந்துகொண்டிருந்தஇரு சக்கர வாகனம் மீது மோதியது. கார் மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் கணவன் மனைவி உட்பட நோனா குப்பம் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லினர். உடனடியாக அங்கு வந்த…
ஓரணியில் தமிழ்நாடு !
கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….
15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டைகலாள் தாக்குதல் !
திருவாரூர் மாவட்டம் : குடவாசல் பருத்திச் சேரி தெற்குத் தெருவை 1.முருகானந்தன் மகன் புகணேசன். 2.முருகேசன் மகன் நந்தகுமார் .3.முருகையன் மகன் ரன்ஜித் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மாலை 7.30 மணி அளவில் 15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டை கலாள் தாக்கப்பட்டு குடவாசல் G.H யில் அனுமதிக்க பட்டு உள்ளார்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரனை நடைபெறுகின்றது.
உறுப்பினர் கல்வித் திட்டம் !
நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆலட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஆலட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் பொன்னான ஏழு கொள்கைகள் குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் அடையாளமாக உள்ள ஏழு வண்ண வானவில் கொடி குறித்தும், கூட்டுறவு இலச்சினையான இணைந்த…
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !
பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 – ஆம் ஆண்டு நினைவு தினம் !
ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்
