ஆன்மிகம்
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !
கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!
விநாயகர் சதுர்த்தி என்பது பாரம்பரியமாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் திருவிழா. ஆனாலும், இதற்கு பின்னால் சில அறிவியல், இயற்கை தொடர்பான காரணங்கள் உள்ளன. காலக்கட்டமும் இயற்கை தொடர்பும் ;-விநாயகர் சதுர்த்தி எப்போதும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் வருகிறது. இந்தக் காலம் மழைக்காலத்துக்கு உடனான நாட்கள். அப்போது ஈரப்பதம் அதிகம், பூமியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகமாக வளரும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. விநாயகர் உருவச்…
கிருஷ்ண ஜெயந்தி விழா.
ஸ்ரீ கிருஷ்ணா கவுர் சேவா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற கோவை செட்டி வீதி பகுதியில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது – பொதுமக்களுக்கு பொது சுகாதார குழு தலைவர் அன்னதானம் வழங்கினார்.. கோவை மாநகர மாவட்டம், கெம்பட்டி பகுதி 80வது வார்டில் செட்டி வீதியில் உள்ள குப்பண்ண தோட்டம் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா ஆன்மீகத் திருவிழாவாக இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்களின் திரளான பொதுமக்கள் பங்கேற்று பகவான் ஸ்ரீ…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு :
ஆக் 16, கன்னியாகுமரி சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினார். உடன் இணை ஆணையர் திருமதி. ஜான்ஸிராணி, ஒன்றிய செயலாளர் திரு. பாபு, பேரூராட்சி தலைவர் திருமதி. னுஷியா தேவி, பேரூர் செயலாளர் திரு.சுந்தர், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் B.தர்மத்துபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் B. தர்மத்துபட்டியில் அருள் மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடல் கச்சேரியுடன் இவ்விழா வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பிக்கப்பட்டது. குடங்களில் மாவிளக்கு அலங்காரம் செய்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் நடைபெற்றது. மற்றும் தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடலுடன் குத்துவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. பக்த பெருமக்கள் பொங்கல் வைத்தல்…
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
தென்காசி ஏப்ரல் – 4 – தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…
உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.
தேவர்களில் ஒருவரான சந்திரன் ஐப்பசி மாத முழு நிலவு(பௌர்ணமி)நாளில் தோஷங்கள் நீங்கி முழு ஒளியைப் பெற்றார் என்பது புராண வரலாறு.அன்றைய நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் சிவனடியார்களால் அன்னாபிஷேக விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை பகுதியில் உள்ள தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்,ருத்ரப்பா நகர்…
ஹரியும் சிவனும் ஒன்னு ! அறியாதவர்கள் வாயில் மண்ணு !
என பாமர மக்கள் கூட சொல்ல கேட்டிருப்போம்.சிவாலயத்தில் தீயில் வெந்த நீரும்.., விஷ்ணு ஆலயத்தில் குளிர்ந்த நீர் தீர்த்த துளசியும் தருகிறார்களே அது ஏன்.? என்றாவது நாம் சிந்தித்து உண்டா.?சிவனுக்கு வில்வம் சூடு , விஷ்ணுவுக்கு துளசி குளிர்ச்சி , நம் உடம்பில் கூட பாதிக்கும் மேல் நீர் அம்சம்தான் உடலை இயக்கும். சக்தியாகிய உயிரோ நெருப்பம்சம்.!அடுப்பிலே நெருப்பு! மேலே பானையில் நீர் ! நீருக்கும் நெருப்புக்கும் நேரடியாக தொடர்பு இல்லை. நீரும் , நெருப்பும் சேர்ந்தால்…
