ஆன்மிகம்
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி
மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?” தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது.
1920ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலைமேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு முதல் மலை உச்சிவரை படிக்கட்டு உள்ள பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோவில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர்…
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.
மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் -தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…
காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.
மடத்துக்குளம் : நவம்பர்,06. மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர்…
உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
உடுமலைநவம்பர் 05. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை,கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனி பிரதோஷம், போன்ற பல்வேறு ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்னாபிசேகத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கு (லிங்கத்திற்கு) தயிர்,பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால…
தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!
திருநெல்வேலி,நவ.5:- தென் தமிழ்நாட்டின் முதன்மையான சிவாலயமான, திருநெல்வேலி வட்டம் மற்றும் நகர், திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்மன்” திருக்கோயிலுக்கு, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உத்தரவுப்படி, மு.செல்லையா, உஷா ராமன், சோனா வெங்கடாச்சலம், ச.செல்வராஜ், ப.கீதா ஆகியோர், அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று (நவம்பர்.5) காலையில், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், திருக்கோவில் உதவி ஆணையர் முன்னிலையில், “அறங்காவலர் குழு தலைவர்” தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்…
உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்…
உடுமலை, அக்டோபர் 28- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த…
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: கந்த சஷ்டி விழா…
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாகும், இதில் முருகப்பெருமான் அசுரனான சூரபத்மனை வதம் செய்கிறார். இன்று 27, 2025 அன்று மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது முருகப்பெருமானின் அருளாற்றலை வெளிப்படுத்தும் ஒரு கோலாகலமான நிகழ்வாகும். கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்டமாக, முருகப்பெருமானின் ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு. இந்த நிகழ்வு, ஆணவத்தையும் தீய சக்திகளையும் அழித்து நற்கதி தரும் பரம்பொருள் முருகப்பெருமானின் ஆற்றலை உணர்த்துகிறது. சூரபத்மனை…
