மணக்குடி; 07
கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது.
அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பாலத்தை அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அவரது முயற்சியின்பேரில், பழுதடைந்த இணைப்பு பாலத்தை அகற்றும் பணி இன்று முறையாக தொடங்கப்பட்டது.
இப்பணி தொடங்கியதன் மூலம், புதிய பாலம் அமைக்கும் முயற்சிக்கும் வழிவகை அமையும் என உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குமரி கோஸ்டல் நிருபர்: அபிஷா.
