விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தி பகுதியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருபவர் சிவா இவரை மர்ம நபர்கள் இன்று காலை அவரது இல்லத்தில் புகுந்து கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின்படி பைனான்சியர் சிவா முன்பு மதுரையில் தொழில் செய்து வந்தபோது அங்குள்ள சில நபர்களிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த விவகாரத்துக்காகவே இன்று காலை பத்திற்க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிவாவின் இல்லத்துக்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த தகவல் கிடைத்ததும் வளத்தி போலீசார் பதினைந்து நிமிடங்களில் துரிதமாகச் செயல்பட்டு துரத்திச் சென்றனர். அப்போது கடத்தப்பட்ட பைனான்சியர் சிவா பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
காரில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை காவல் அதிகாரிகளின் வாகனங்கள் தங்களை பின்தொடர்வதைக் கண்டு வாகனத்தில் எதிர்திசையில் மிக வேகமாக ஓட்டியதில் அங்கு பயணித்துக் கொண்டிருந்த பத்திற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரு சில நபர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டு இருச்சக்கர வாகனங்கள் சேதமடைந்தது.
இதனை தொடர்ந்து பைனான்சியர் சிவாவை விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரம் பகுதியில் இறக்கி விட்டு விட்டு மற்றோர் கார்கள் மூலம் மதுரை நோக்கி தப்பிச் சென்றதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

தப்பிய நபர்களை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் அண்டை மாவட்டங்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சுங்கச்சாவடிகள் மற்றும் புறவழிச் சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்
மேலும் அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில் காரில் மிக வேகமாக சென்று நபர்கள் கஞ்சா போதையில் வாகனத்தை ஓட்டி சென்றதாகவும் கூறினர்.
