அக் 09; கன்னியாகுமரி
நாகர்கோவில் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதிய உணவு இடைவேளையில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“நீதித்துறையின் மரியாதை காக்கப்பட வேண்டியது அவசியம். நீதிபதி மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் கண்டனத்துக்குரியது. இத்தகைய தேச துரோக செயல்களில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு “நீதித்துறைக்கு மரியாதை வேண்டும் – வன்முறைக்கு இடமில்லை” எனக் கோஷமிட்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
