ஆக் 21, கன்னியாகுமரி
குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆக.19-ல் ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார்.
அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது.
2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளதால் மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8000க்கு ஏலம் போனது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
