Headlines

தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் ரயில் மறியல் போராட்டம் பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு எதிராகவும்! போராடி பெற்ற சட்டங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தச் சட்டம் கொண்டு வந்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் எம். ராமச்சந்திரன் சிஐடியு மாவட்ட செயலாளர், எம் எஸ் பி ராஜ்குமார் எஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர், சர்க்கரை. எம். முருகன் எல். பி. எஃப் மாவட்ட கவுன்சில் செயலாளர், எ. முருகேசன்.
எஐடியுசி மாவட்ட செயலாளர், கே. காசிமாயன், டியுசிசி மாவட்ட பொதுச்செயலாளர் ஜம்பு சுதாகர் ஐஎன்டியுசி மாவட்ட தலைவர், டி. முத்தையா எஸ்எம்எஸ் மாவட்ட செயலாளர் மற்றும் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளார்கள். தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை அமுல்படுத்தாதே! அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000 வழங்குக! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்! பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே! நலவாரிய உறுப்பினர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *