“மண், மொழி, மானம் காத்திட – ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் தலைமையில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பூத் எண்: 208 பகுதிகளில் உள்ள குப்பண்ண தோட்டம், காட்டேரி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பாக கலந்து கொண்டு மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி பொது மக்களை சந்தித்து கழக உறுப்பினர் சேர்க்கையில், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் கலந்து கொண்டனர்.
உடன் BLA-2 இந்திரா காந்தி – முருகானந்தம், BDA – ஜி.மணிமேகலை மகளிர் அணி மற்றும் வட்டக் கழக உறவுகள், திரளாக கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் -சம்பத்குமார்.
