Headlines

வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் – மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் - மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

மதுரை : நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி ஒரு அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவர் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விளக்கு தூண் காவல் நிலையத்தில் உள்ள விஜயகுமார் (SA) பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை வழக்கை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உனது மகனை சிறையில் வைத்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார் என ராஜேஸ்வரி வீடியோ வெளியிட்டார் .

முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலினுக்கும் மற்றும் மதுரை மாநகர காவல் துறைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *