Headlines

குமரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார்..!

குமரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார்..!

கன்னியாகுமரி, மார்ச் 6:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார்.

இதன் ஒரு பகுதியாக, இறச்சகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் விமர்சையாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான திரு. மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான திரு. ரெ. மகேஷ், முன்னாள் அமைச்சர் திரு. சுரேஷ் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் திரு. சிவராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன், மாணவரணி அமைப்பாளர் திரு. அகஸ்தீசன் மற்றும் திமுக நிர்வாகிகளான திரு. ஆனந்த், திரு. டேவிட்சன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும், ஏராளமான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் இந்நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *