சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!
திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கான…
