மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி:பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பாராட்டு.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றபாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சிவகங்கையில் நடைபெற்றது.இந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் சந்தியா மற்றும் யோக தர்ஷினி ஆகியோர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதலிடம் பிடித்துள்ளனர்.இம் மாணவிகள்…
