Headlines
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகளில், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பாரத்தை மட்டுமே (Overloading தவிர்த்து) ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு சரியான அளவில் பாரம் ஏற்றி வரும்போது, செங்கல் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்…

Read More
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகம்: ஜி.வி.ஜி கல்லூரி மாணவிகள் அசத்தல்!

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகம்: ஜி.வி.ஜி கல்லூரி மாணவிகள் அசத்தல்!

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் (NSS) மற்றும் கணியூர் காவல் நிலையம் இணைந்து, கணியூர் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகத்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சிருஷ்டி சிங், IPS அவர்களின் உத்தரவின்படியும், உடுமலைப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி தையல் நாயகி DSP அவர்களின் மேற்பார்வையிலும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. கணியூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக்குமார், காவலர்கள் திரு….

Read More
விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு

விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு.

09 ஜூலை; நெல்லை நியூஸ் திருநெல்வேலியில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாட்டை பாராட்டிய சரக டிஐஜி திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிங்கப்பெண் சிறப்புப் படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மூன்று மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த குற்றச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்து காவல்துறையை அணுகியுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜெசி மேனகாவை நெல்லை சரக காவல்துறை டிஐஜி திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டினார். மாணவிகள் தங்களுக்கெதிராக நடைபெற்ற…

Read More
கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

09 ஜூலை, நெல்லை நியூஸ் தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தம்; ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகளில் பொறியியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் முதல் உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோளாறின் தன்மை…

Read More
குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து; சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து; சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.

மழை தொடர்ந்ததால் அருவிகளில் நீராட ஏற்ற சூழல்; பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து நிலவி வருவதால், நீராட வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. முக்கிய அருவிகளில் நீரின் ஓட்டம் சீராக இருப்பதால், குடும்பங்களும் இளைஞர்களும் அதிக அளவில் வருகை தந்து இயற்கைச் சூழலை ரசித்து நீராடி மகிழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம்…

Read More
பாதுகாப்பே முன்னுரிமை: சாலை விதிமீறலுக்கு யாருக்கும் விதிவிலக்கு இல்லை! என மாவட்ட ஆட்சியர்... நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டிய மாவட்ட நிர்வாகம்.

பாதுகாப்பே முன்னுரிமை: சாலை விதிமீறலுக்கு யாருக்கும் விதிவிலக்கு இல்லை! என மாவட்ட ஆட்சியர்… நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டிய மாவட்ட நிர்வாகம்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் அவர்களுக்கு, நாகர்கோவிலில் செய்தித்துறை மற்றும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜேஷ் குமார் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் விழாவில் உரையாற்றினார். விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், சாலைப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் மாவட்ட காவல்துறை எவ்வித விதிவிலக்கும் இன்றி செயல்பட்டு வருவதாகக் கூறினார். “மாவட்ட ஆட்சியரான நானே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம்…

Read More
300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு! நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு!நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

கோவை தெற்கு வட்டம், உப்பார வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் சாவியானது புதிய கமிட்டியிடம் நேற்று (ஜூலை 2) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் 1972ஆம் ஆண்டு உத்தரவின்படி, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவே இக்கோவிலை நிர்வகிக்க…

Read More
நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத்…

Read More
பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி : ஜூலை 02,தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று (01-07-2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.பாலசமுத்திரம் குரும்பப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பழனி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முத்துசாமி பாண்டியன் தலைமை தாங்கி, தடுப்பூசி பணியினைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்யா ஆகியோர் அடங்கிய கால்நடை…

Read More
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More