விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!
திருநெல்வேலி,நவ.6:- தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள, ரவணசமுத்திரம் ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி க.பார்வதி (வயது.41). இவர் கடந்த 2-ஆம் தேதி மாலையில் வேலை முடிந்து, ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டருகே ஆட்டோ வந்தபோது, அதிலிருந்து இறங்கினார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது, பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த பார்வதிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைக்காக, பார்வதி, கடையம்…
