திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!
திருநெல்வேலி,ஜன.8:- திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து “கரையிருப்பு” பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி இசக்கி பாண்டி [வயது.36]. இவர், தன்னுடைய மனைவி சுப்புலட்சுமியுடன், கடந்த சனிக்கிழமை [ஜன.4] நள்ளிரவு 12-30 மணியளவில், மானூர் வழியாக, கரையிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் சாலையில் சுயநினைவின்றி கிடந்தனர். இதே நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கணவர்…
