திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!
திருநெல்வேலிஅக்.27:-பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று ( அக்டோபர்.27) காலையில், “ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு உறுதிமொழி!” எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர், தங்களுக்கிடையே ஊழல் தடுப்பு, விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த உறுதிமொழியை, மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டனர். “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக, நான்…
